“ஆணுக்குப் பெண் சரிசமம்” எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு விடுதலைப் போரில், பெண்களைச் சிறுமைப்படுத்தும், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் மிகத் தெளிவாக இருந்தது “தமிழர் விடுதலை இராணுவம்!”
அதன்பொருட்டு வெளியிலிருந்து வரும் அனைத்துலகத் திரைப்படங்களும் முற்பார்வை செய்யப்பட்டு, மேற்கூறிய வகைக்கு உட்பட்ட காட்சிகள் வெட்டப்படும். இதற்கு எங்கள் அரசு “தணிக்கை” என்று பெயரிட்டிருந்தது.
நிதர்சனம் நிறுவனத்தால் இது செய்யப்படும். தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் நிதர்சனம் நிறுவனத்தின் இலச்சினையோடு வெளியிடப்படும்.
பல தமிழ்த் திரைப்படங்களில் வரும் பெண்களைச் சிறுமைப்படுத்தப்படும் பாடல்கள் வெட்டி எடுக்கப்படும். பெண்களைச் சிறுமைப்படுத்தும் நகைச்சுவைக் காட்சிகள் தொடங்கி வன்புணர்வுக் காட்சிகள் வரை வெட்டப்படும்.
வெறுமனே ஆயுதம் ஏந்திய போரை மட்டும் அவர்கள் நடத்தவில்லை; சமூகத்தின் அத்தனை பிரிவுகள் மேலும் “புலிப்பார்வை” இருந்தது.
சும்மா ஒரு நினைவூட்டலுக்கு
