டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி

டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி

டக்ளஸ் மற்றும் ஈ.பி.டி.பியின் பாலியல் கொடுமைகளை அம்பலப்படுத்திய ஆவணங்கள்! டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் (EPDP), பிற அரச ஆதரவு ஆயுதக் குழுக்களும் (கருணா மற்றும் பிள்ளையான் குழுக்கள்) தமிழ்ப் பெண்களைக் கடத்தி இராணுவத்தின் பாலியல் தேவைகளுக்கு இரையாக்கினார்கள் என்றும், அவர்களைப் பாலியல் தொழில் கும்பல்களிடம் விற்றார்கள் என்றும் பல தகவல்கள் கசிந்திருந்தன.​இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து யுவதிகளைக் கைதுசெய்தும், ‘வெள்ளை வேன்’ மூலம் கடத்தியும் தமது முகாம்களுக்குக் கொண்டு சென்றதாகவும், இவர்கள் இலங்கை இராணுவத்திடமும் மற்றவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டு, அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.​கடத்தப்பட்ட பல பெண்கள் வீடு திரும்பவில்லை; மீண்டும் வந்த சிலரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சமூக அவமானம் காரணமாகத் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை வெளியில் சொல்லவில்லை என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. விக்கிலீக்ஸ் ஆவணங்களும் அமெரிக்கத் தூதுவரின் பதிவுகளும். 2007-ஆம் ஆண்டு இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ. பிளேக் (Robert O. Blake), டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது குழுவினரின் பாலியல் குற்றங்கள் குறித்து மூன்று முக்கிய சாட்சிகளின் அடிப்படையில் வாஷிங்டனுக்கு அனுப்பிய இரகசியத் தூதரக ஆவணங்கள், பின்னாளில் (2010-2011 காலப்பகுதியில்) ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் மூலம் அம்பலமாகின. யாழ்ப்பாணத்தில் உள்ள ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) அமைப்பின் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான ஸ்டீபன் சுந்தரராஜ் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்ததாவது: ஈ.பி.டி.பி (EPDP) அமைப்பானது தமது கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவைத் தளமாகக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் கடத்தல் வலையமைப்புகளை நடத்தி வருகின்றது. யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையிலான விதவைகள் இருப்பதால், அவர்களை அணுகும் ஈ.பி.டி.பியினர், அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பும் உதவியும் அளிப்பதாக வாக்குறுதியளிக்கின்றனர். இதன் மூலம், குழந்தைகளுடன் உள்ள பெண்களை, குறிப்பாகப் பெண் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களைத் தமது வலையில் வீழ்த்த முனைகின்றனர் எனவும். அப்பெண்களுடன் ஓர் உறவை ஏற்படுத்திய பின்னர், ஈ.பி.டி.பியினர் அவர்களின் குழந்தைகளைச் சில சமயங்களில் பலவந்தமாகவும், சில சமயங்களில் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியுடனும் அழைத்துச் செல்கின்றனர். அதன் பின்னர், அக்குழந்தைகள் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். பொதுவாக, சிறுவர்கள் வேலை முகாம்களுக்கும், சிறுமிகள் படையினருக்கும், பாலியல் தொழில் கும்பல்களுக்கும் ஈ.பி.டி.பியின் இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள வலையமைப்புகள் மூலம் விற்கப்படுகின்றனர் என்றும். EPDP மற்றும் படைவீரர்கள் தங்கள் மகள்களை அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்ற நம்பிக்கையில், குடும்பங்கள் மிக இளம் வயதிலேயே அவர்களுக்குத் திருமணங்களை ஏற்பாடு செய்ததாகவும். குழந்தைக் கடத்தலுக்கு மேலதிகமாக, EPDP அமைப்பானது சிறுவர் “கடத்தல்காரர்களை”ப் பயன்படுத்தி ஒரு சட்டவிரோத மதுபானக் கடத்தல் கும்பலை எவ்வாறு இயங்குகின்றது என்பதை அன்று சுந்தரராஜ் விவரித்ததாகவும்.​கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் குடிவரவு அதிகாரி ஒருவரின் உதவியுடனேயே இக்குழந்தைகள் அடிக்கடி நாட்டிலிருந்து கடத்தப்படுவதாகவும் அவர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணம் கூறுகின்றது.​இவர் கூறிய இதே விடயங்களை அன்றைய யாழ். முன்னாள் அரசாங்க அதிபர் க. கணேஷ் (2005 – 2010) கூறியதாகவும், அவற்றை உறுதிப்படுத்தியதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்குத் தகவல்களை அனுப்பியுள்ளது. முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் க. கணேஷின் சாட்சியம்​முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் க. கணேஷ் அவர்கள் அமெரிக்கத் தூதுவரிடம் கூறுகையில், ஈ.பி.டி.பி அமைப்பானது இலங்கை இராணுவத்துடன் இணைந்து படைவீரர்களுக்காகத் தமிழ் விபசாரக் கும்பல்களை இயக்குவதாகவும், இளம் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஓர் இரவில் ஐந்து முதல் பத்து படைவீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சில சமயங்களில் ஒவ்வொரு “சேவைக்கும்” அவர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.​இவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சியும், இவை அந்தப் பெண்களின் நற்பெயரைக் கெடுத்து எதிர்காலத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்வதையே சாத்தியமற்றதாக்கிவிடும் என்பதாலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் பெற்றோர்களால் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முடிவதில்லை என அவர் அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ. பிளேக் அவர்களிடம் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு, வழக்கமான மருத்துவப் பரிசோதனை என்ற போர்வையில் கட்டாயக் கருக்கலைப்புகளைச் செய்வதற்கு, டாக்டர் சின்னத்தம்பி என்ற ஈ.பி.டி.பி மருத்துவரைப் பயன்படுத்தியதாகக் கத்தோலிக்கப் பாதிரியாரான அருட்தந்தை பெர்னார்ட் தம்மிடம் கூறியதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதிலும் குறிப்பிட்டிருக்கின்றார். குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் ஈ.பி.டி.பி-யின் மதுபானக் கடத்தல் வலையமைப்புப் பற்றி மிக விரிவான ஆதாரங்களை வழங்கிய ஸ்டீபன் சுந்தரராஜ், இந்தச் சந்திப்பு நடந்து இரண்டு வருடங்களில், காவல்துறையினரால் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஆட்கொணர்வு மனுவின் மூலம் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுச் சில மணி நேரங்களிலேயே (மே 7, 2009), நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வைத்து வெள்ளை வேனில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். இன்றுவரை அவரது கதி என்னவென்று தெரியாத நிலையில், டக்ளஸ் தேவானந்தாவே இவரைக் கடத்திப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, மக்களுக்காகப் பணியாற்றிய அருட்தந்தை மேரி பெர்னார்ட் அவர்களும் மற்றவர்களும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். அதன் பிறகு இராணுவப் பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்ட அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இதனை “வட்டுவாகல் சரணடைவு” எனக் குறிப்பிடுகின்றனர். இராணுவத்திற்காக ஈபிடிபியினர் கட்டாயப் பாலியல் தொழிலை ஈடுபடுவதனை உறுதிப்படுத்திக் கூறிய யாழ் முன்னாள் அரச அதிபர் க. கணேஷ், 2010 வரை கடுமையான கண்காணிப்பு மற்றும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே பணியாற்றி, பின்னர் உடல்நலக் குறைவால் காலமானார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களிலும், OISL சர்வதேச விசாரணை அறிக்கையிலும் இந்த விக்கிலீக்ஸ் ஆவணங்கள் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களும், போர்க்காலத்தில் துணை இராணுவக் குழுக்களும் அரச படைகளும் இணைந்து நடத்திய கடத்தல்கள் மற்றும் பாலியல் கொடுமைகளை நிரூபிக்க முதன்மைச் சான்றுகளாக அமைந்தன. அன்று யாழ். அரசாங்க அதிபர் க. கணேஷ் அவர்கள், கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கப்பம் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தாவை, அவர் ஓர் அமைச்சர் என்ற அடிப்படையிலும், தான் ஓர் அரச அதிகாரி என்ற நிர்ப்பந்தத்தினாலும் பொன்னாடை அணிவித்து வரவேற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தனக்கு ஏற்பட்டதாக, அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ. பிளேக் அவர்களிடம் தெரிவித்திருக்கின்றார். வெளிப்படையாகப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தாலும், மனதளவில் அவர் அனுபவித்த அருவருப்பையும் குற்றவுணர்வையும் இந்த வார்த்தைகள் ஆழமாகக் காட்டுகின்றன. ஓர் அரச அதிகாரி, தனது கடமையின் பெயரால் ஒரு குற்றவாளியைக் கௌரவிக்க வேண்டியிருந்த அவலத்தைச் சர்வதேச ராஜதந்திரியிடம் பகிர்ந்து கொண்டமையானது, அவரது சாட்சியத்தின் நம்பகத்தன்மையைப் பல மடங்கு உயர்த்துகின்றது. ஸ்டீபன் சுந்தரராஜ் அவர் கடத்தப்பட்டதும் மற்றும் படுகொலை செய்யப்பட்டதும், டக்ளஸ் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. இச்சம்பவங்களில் கோட்டாபய, இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் எனப் பலருக்கும் நேரடித் தொடர்பு இருந்துள்ளன. டக்ளஸின் செயற்பாடுகளை யாரும் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகப் படைத்தரப்பினர் தன்னிடம் கூறியதாக, முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் அப்போது அமெரிக்கத் தூதரிடம் தெரிவித்திருந்தார். பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கட்டாயக் கருக்கலைப்பிற்கு உள்ளாக்கியதில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. அமைப்பு ஈடுபட்டிருந்ததும், அச்செயல்களுக்குச் சின்னத்தம்பி என்ற அவர்களின் மருத்துவர் உடந்தையாக இருந்ததும் மிகவும் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களாகப் பதிவாகியுள்ளன. அதேவேளை சிங்கள ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்துகொள்ளும் நிகழ்வுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டக்ளஸின் உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்தியதற்காகத் தமது உயிரையே விலையாகக் கொடுத்த ஸ்டீபன் சுந்தரராஜ் அவர்களின் ஈகம், என்றென்றும் நீதி கேட்டு நிற்கும் சாட்சியமாகும். 1986-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் குடித்துவிட்டு, உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு உயிரைக் குடித்தான். இவ்வழக்கில் சிறையில் இருந்தவன், பின்னர் பிணையில் வெளிவந்தான். 1989-ஆம் ஆண்டு, சென்னையில் சிறுவன் ஒருவனைக் கடத்தி, அச்சுறுத்திப் பணம் பறிக்க முயன்றான்; அக்குற்றத்திற்காகவும் அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவன் இந்திய நீதிமன்றத்தால் “தேடப்படும் குற்றவாளி”ஆனான். அங்கிருந்து தப்பியோடி இலங்கையை அடைந்த அவன், அங்கும் தமிழ் மக்களின் குருதியை உறிஞ்சிக்கொண்டும், தமிழ்ப் பெண்களின் மானத்தை விற்றுக்கொண்டும், எவ்விதத் தண்டனைக்கும் ஆளாகாத பெருங்குற்றவாளியாய் இன்றளவும் வலம்வருகின்றான் இந்த பத்மநாபா வளர்த்தெடுத்த டக்ளஸ் தேவானந்தா என்பவன். கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களும் கிழக்கில் இவ்வாறான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்கள் அதனைப் பின்னர் பதிவு செய்கிறேன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *