தலைநகர் கொழும்பில் தமிழர்களில் சிந்திய முதலாவது குருதி

தலைநகர் கொழும்பில் தமிழர்களில் சிந்திய முதலாவது குருதி

ஶ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களில் சிந்திய முதலாவது குருதி இன்று 70, ஆண்டு நினைவு-05/06/2026.

“சிங்களம் மட்டும் சட்டம்” 1956 ,யூன்,05 அன்று அப்போதைய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் ஆட்சியமைத்த இலங்கை பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1956 ஆம் ஆண்டு யூன் 05 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டம் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

அந்த்சட்டமூலம் நிறைவேற்றிய நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில், காலிமுகத்திடல் பகுதியில் தமிழரசுக்கட்சியினரால் தந்தை செல்வா சத்தியாக்கிரகப் போராட்டத்தை 1956 யூன் மாதம் 5ம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பித்தார்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா பாராளுமன்றத்தின் மேல்மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, சிங்களக் குண்டர்கள் சத்தியாக்கிர போராட்டம் நடத்திய தமிழர்கள்மீது குண்டாந்தடிகளால்த் தாக்கி சத்தியாக்கிரகத்திற்கு இடையூறு விளைவித்தனர் அப்போது கலந்து கொண்ட வடகிழக்கு தமிழர்கள் பலர் இரத்தக்காயம் ஏற்பட்டது.

தாக்கப்பட்டபோதும்தமிழ்த்தலைவர்களும், தொண்டர்களும் அவ்விடத்தை விட்டுஅசையவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றினார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்றது.

தலைநகர் கொழும்பில் சிந்திய தமிழர்களின் முதலாவது குருதி இதுவாகும் இது 1956, யூன்,05.ல் ஶ்ரீலங்கா பாராளுமன்றத்துக்கு முன் சிந்தியது இன்று 2026, யூன்,05,ம் நாள் 70, ஆண்டுகள் நினைவு.!

தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்கா அரசு 1958 ,செப்டெம்பர்,03,ல் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி ‘நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை’ அங்கீகரித்தது. பின்வரும் விடயங்களை விதந்துரைத்தது:

* தமிழ்ப் பாடசாலைகளில் போதனாமொழியாகத் தமிழ்,

* தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படல்,

* அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ்,

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல்

ஆகியனவாகும்.

ஈழத்தமிழ் இன விடுதலை வரலாறுகளை இன்றைய இளைஞர்கள் அறிவது அவசியம்.!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *