லெப். கேணல் போர்க்..

தம்பியவை மாவீரர் நாள் வருகுதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?

ஏன் நீங்கள் சாகப்போறிங்களோ அண்ணன்?

போர்க் ம் சிரித்தபடி தற்செயலா நான் செத்தா மாவீரர் நாளில ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன’

அந்தக்காடுகளில் உள்ள பல மரங்களின் வயது 35 ஆக இருக்கும்.

அந்த மரங்கள் போர்க்கின் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும்.

மக்களை மட்டுமல்ல மக்களை வாழவைக்கும் இயற்கையினையும் நேசித்த உன்னத மாந்தர்கள்.

அடுத்தநொடி மரணம் என்னும் எண்ணம் தரும் அச்சம் மிக கொடூரமானது.

ஆனால்,

“ உயிர்போகும்வேளையிலும் பு லி க ள் முகம் சிரித்த முல்லை..” என்னும் வரலாற்றை வரைந்த காவியப்புதல்வர்கள்..