இனத்துரோகிகள் இந்த மண்ணிற்கு வேண்டாம்…
வரலாறு ஒருபோதும் மன்னிக்காது இவர்களை…
நாங்க யாழ்பல்கலையில் கற்கின்ற போது 2010ம் ஆண்டு என நினைக்கிறேன் இந்தியாவிலிருந்து டீ ஆர் பாலு தலைமையில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் மகிந்தவிடம் ஆசிபெற்று விருந்துண்டு யாழ்ப்பாணம் வந்தார்கள் யாழ் நூலகத்தில் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மகிந்தவின் பிரதிநிதியாக டக்கிளசும் கலந்து கொண்டார். சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் விரிவுரையாளர்கள் என பலர் கலந்து கொண்ட கூட்டமது. கூட்டத்தை புறக்கணிக்கிற மனநிலையிலிருந்தாலும் சில நாக்குப்பிடுங்கிற கேள்விகளைக்கேட்க வேண்டும் என்ற மனநிலையி்ல் அதில் கலந்து கொண்டோம்.
ஒரு ரஜீவ்காந்திக்காக இன்னும் எத்தனை உயிர்களை பலியெடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டோம்?
பக்கத்தில் ஒரு இனம் கருவறுக்கப்பட்ட போது தொப்புள்கொடி உறவென்று மார்தட்டும் தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருந்தது. காங்கிரசும் திமுகாவும் எம்மை அழிக்க சிறிலங்காவிற்கு துணைபோனது என பல கேள்விகள்.
பல்கலைக்கழக மாணவர்களின் கேள்வியால் வந்தவர்கள் திணறினார்கள். ஒப்புக்கேனும் திருமாவளவன் வாயே திறக்கவில்லை கனிமொழி ஏதோ உருட்டினார். டீ ஆர் பாலு சற்று கோபப்பட்டு ஆக்கிரோசமாக கதைத்தார். டக்கிளஸ் மென்று விழுங்கி தனது பாணியில் கதைத்தார். உப்பிச்சப்பில்லாத கூட்டமாக அன்றைய கூட்டம் முடிந்தது ஏதோ ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தவர்களாக வந்தவர்களுக்கு முகத்திலறைந்ததைப்போல கேள்விகளைக்கேட்டுவிட்டு வந்தோம்.
அன்று திமுகாவிற்கும் காங்கிரசுக்கும் முண்டுகொடுத்து இனத்தை அழிக்க துணைபோனவர்கள் யுத்தம் நடந்து சில மாதங்களுக்குள் இனப்படுகொலையாளி மகிந்தவை வாழ்த்த வந்த திருமாவளவன் கோஷ்டி மகிந்தவிற்கு வெள்ளையடிக்க யாழ்ப்பாணம் வந்தவர்கள் 16ஆண்டுகளில் நீலிக்கண்ணீர் வடிக்க முள்ளிவாய்க்காலில் நிற்கிறார்கள். இந்த ஆத்மாக்கள் இவர்களை ஒருபோதும் மன்னிக்காது இவர்களை இங்கு அழைத்து செங்கம்பளம் விரிப்பவர்களையும் வரலாறு மன்னிக்காது.
கார்த்திகை மாதம் கனதியான மாதம் அது இரண்டகர்களை அம்பலப்படுத்தும்.
நன்றி
எஸ்.தவபாலன்



